சாலையை கடக்க முயன்ற 7 பேர்... அடுத்த நொடி நடந்த சம்பவம் - மதுரையை உலுக்கிய கோர விபத்து!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உசிலம்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு அரசு பேருந்தில் திரும்பினர். அவர்கள் குஞ்சாம்பட்டி பேருந்து நிறுத்ததில் இறங்கி சாலையை கடக்க முயன்றனர். அப்போது, தேனியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி அதிவேகத்தில் வந்த கார் இவர்கள் 7 பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள் : Rain Alert | சம்பவம் செய்யப்போகும் மழை… கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!
இதில், 7 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த
ஒரு வயது பச்சிளம் குழந்தை பிரகலாதன், ஜோதிகா, லட்சுமி,
பாண்டிச்செல்வி ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் ஒரு வயது பச்சிளம் குழந்தையான கவியாழினி, ஜெயமணி, கருப்பாயி ஆகிய 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநர் பூச்சிபட்டியைச் சேர்ந்த ஆனந்த குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.,