பாகிஸ்தானில் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு !
பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் முகாமில் இருந்து ஒரு வீட்டின் மேற்கூரை கடந்த சனிக்கிழமை (மார்ச். 8) இரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
அவர்கள் கண்ணியத்துடன் சொந்த நாடு திரும்ப வசதியாக, முன்பே போதிய நேரம் அளிக்கப்பட்டு விட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அப்படி இல்லையென்றால், ஏப்ரல் 1ம் தேதி முதல் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.