For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

12:32 PM Feb 01, 2024 IST | Jeni
55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்      நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Advertisement

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : விரைவில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம்...! - பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடல்சார் உணவு ஏற்றுமதி பத்தாண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் சுற்றுலாத்துறையில், ஆன்மீக சுற்றுலாவுக்கான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், இதன்மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

Tags :
Advertisement