17 ஆண்டுகளாக 500 சர்வதேச போட்டிகள்… தனது ஃபிட்னெஸ் பற்றிய கிண்டலுக்கு #RohitSharma பதிலடி!
ஃபிட்டாக இல்லாமல் போனால் விரைவில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைக்க முடியாது என ரோகித் சர்மா தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் ரோகித் சர்மா, ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா. அவர் 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.அந்த வெற்றியுடன் 37 வயதாகும் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் இதுவரை 485 போட்டிகளில் விளையாடியுள்ள தாம் ஃபிட்டாக இல்லாமல் போனால் விரைவில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைக்க முடியாது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட்டில் பார்ப்பதற்கு ஃபிட்டாக இருக்கிறோமா என்பதை விட திறமையுடன் விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றுகிறோமா என்பதுதான் முக்கியம் என்றும் அவர் கிண்டல்களுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : 7 நாள் தான் கேப்… அடுத்தடுத்து வெளியாகும் #FahadhFaasil – ன் 2 திரைப்படங்கள்!
இது பற்றி அண்மையில் அவர் பேசியதாவது :
"இந்தியாவுக்காக 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 500 போட்டிகளில் விளையாடியுள்ளேன். உலகளவில் நிறைய வீரர்கள் இதை சாதித்ததில்லை. அப்படி நீண்ட காலம் விளையாடுவதற்கு உங்களுடைய ஃபிட்னஸ் மற்றும் மனநிலையை எப்படி வகித்து பயிற்சி எடுக்கிறீர்கள் என்பது முக்கியம். போட்டிகளுக்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். போட்டிகளில் 100% சிறப்பாக செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்களது வேலையாகும்.
என்னைப் பொறுத்த வரை எப்போதும் 100% போட்டிக்கு தயாராக இருந்து என்னுடைய சிறந்தவற்றை கொடுப்பேன். ஒவ்வொரு தனி நபர்களும் வித்தியாசமானவர்கள். என்னைப் பொறுத்த வரை கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் என்பது உடல் வடிவில் நீங்கள் எப்படி தெரிகிறீர்கள் என்பதை பொறுத்தது மட்டுமல்ல.
அது அணியின் வெற்றியில் நீங்கள் என்ன பங்காற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அது 4 - 5 நாட்கள் அல்லது 100 ஓவர்கள் அல்லது 20 ஓவர்கள் உங்களால் முழு ஆர்வத்துடன் பீல்டிங் செய்ய முடிகிறதா என்பதைப் பொறுத்தது. கடந்த 8 - 9 ஆண்டுகளாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது எனது உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக ஓய்வெடுத்து வேலை செய்து மீண்டும் தயாராக வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.