5 யானைகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் தென் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி 25-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஐந்து யானைகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் 37 குழுவினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 120க்கும் மேற்பட்ட யானைகளும், களக்காடு வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி – நடப்பு தொடரிலிருந்து வெளியேறிய RCB அணி.!
அகத்தியமலை யானைகள் காப்பகம் சுமார் 11,947 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இந்த யானைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டாவது முறையாக அகத்தியமலை யானைகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.