For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது!

இரண்டு சிறுவர்களுடன் யூடியூபர் திவ்யா கள்ளச்சி மற்றும் அவரின் நன்பர்கள் உள்ளிட்ட 4பேர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக குழந்தை நல அலுவலர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
06:59 PM Jan 29, 2025 IST | Web Editor
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா உட்பட 4 பேர் கைது
Advertisement

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கார்த்திக் ஐ லவ் யூ. கார்த்திக் மாமா.. என கார்த்திக்கை தேடி அலைந்து பிரபலமானவர் தான் திவ்யா கள்ளச்சி. இவர் கார்த்திக், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி வீடியோவில் பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். இவர் தமிழ் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியிலும் பேசி வந்தார். இவது வீடியோக்கள் பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்ததை பாசிட்டிவ்வாகக் கொண்டு, அடுத்தடுத்து வீடியோ போட்டு பிரபலாகி அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.

Advertisement

இந்நிலையில் குழந்தை நல அலுவலர் மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா கள்ளச்சி தனது மூன்று நண்பர்களுடன் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாகவும், அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலிசார் நால்வரயும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement