பேருந்தில் பயணம் செய்த 4 கிளிகள்.. ரூ.444 வசூலித்த நடத்துநர்!
கர்நாடகாவில் பேருந்தில் பயணம் செய்த நான்கு கிளிகளுக்கு பயணச்சீட்டு கட்டணமாக ரூ. 444 நடத்துநரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரிலிருந்து மைசூருக்கு கர்நாடக அரசு பேருந்து ஒன்று ( KSRTC) சென்றுள்ளது. அப்பேருந்தில் பெண் ஒருவர் தனது பேத்தி மற்றும் நான்கு கிளிகளுடன் சென்றுள்ளார். அரசு பேருந்தில் பயணம் செய்யும் விலங்குகள், மற்றும் பறவைகறளுக்கு மொத்த டிக்கெட் விலையின் நான்கில் ஒரு பங்கு வாங்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் நடத்துநர் அப்பெண்ணிடம் ஒரு கிளிக்கு ரூ.111 வீதம் நான்கு கிளிகளுக்கு ரூ.444க்கு டிக்கெட் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை போலவே கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அப்பெண்ணிற்கும், சிறுமிக்கும் டிக்கெட் வாங்கப்படவில்லை. இந்நிகழ்வு தெலுங்கு ஸ்கிரைப் என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.
చిలుకలకు ₹444 బస్ టికెట్ కొట్టిన కండక్టర్
కర్ణాటక - ఓ మహిళ తన మనవరాలితో కలిసి బెంగళూరు నుంచి మైసూరుకు బస్సులో ప్రయాణించింది. 4 చిలుకలను వెంట తీసుకొచ్చింది. 'శక్తి' పథకంలో భాగంగా వారికి కండక్టర్ ఫ్రీ టికెట్ ఇచ్చాడు కానీ చిలుకలను బాలలుగా పరిగణిస్తూ ₹444 ఛార్జీ వసూలు చేశారు.… pic.twitter.com/WzhVS2NDB6
— Telugu Scribe (@TeluguScribe) March 28, 2024
- நடத்துநர் விதிமுறைகளை பின்பற்றுகிறார்.
- இதில் என்ன தப்பு இருக்கு. பேருந்து என்பது மனிதர்களுக்கானதுதான். விலங்குகளுக்கு அல்ல. அவர் கட்டணத்தை இரண்டு மடங்காக வசூலித்திருக்க வேண்டும்.
- ஆனால் ஏன் நான்கு பேருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது? அவர்கள் ஒரே இருக்கையில் தானே அமர்ந்துள்ளனர்.
- நடத்துநர் நல்ல வேளையை செய்துள்ளார்.
என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.