ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருக கொம்புகள் பறிமுதல் - 4 பேர் கைது!
புதுடெல்லியில் காண்டாமிருக கொம்புகளை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புது டெல்லியில் காண்டாமிருக கொம்புகள் விற்பனை பற்றிய ரகசிய தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. அந்த தகவலின் பேரில், லாக்பட் பகுதியில் காண்டமிருக கொம்புகளை வாங்கும் வாடிக்கையாளர் போல ஒரு கான்ஸ்டெபில் மப்டியில் சென்றார். அவர் கடத்தல் காரர்களுடன் பேரம் பேசி அந்த கொம்புகளை 1 கோடி ரூபாய் என முடிவு செய்தார்.
இதனால் அவர்கள் கொம்புகளை விற்பனை செய்ய தயாரானார்கள். அப்போது காவல் துறையினர் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற நபர்களின் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் விற்பதற்காக கடத்தி பதுக்கி வைக்கப்படிருந்த 2 காண்டா மிருக கொம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த குற்றத்தில் தொடர்புடைய உத்தம் நகர் பகுதியை சேர்ந்த தீபக் சர்மா, சண்ட் ராம், சுரேஷ் குமார் மற்றும் அணில் குமார் சேதி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடன் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காண்டாமிருக கொம்புகள் சர்வதேச சந்தையில் 3 கோடி மதிப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.