Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய ரூபாயை பயன்படுத்திக்கொள்ள 35 நாடுகள் ஒப்புதல் - மத்திய அமைச்சர் தகவல்!

04:50 PM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய ரூபாயை 35 நாடுகளில் இனி பயன்படுத்தலாம் என்றும் அந்தந்த நாட்டின் பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

“இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்" என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று (ஜன. 13) நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்றார். இதில் அவர் பேசியபோது,

“அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முற்பட்டபோது அதனை எதிர்கொள்ள அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. லண்டன் பொருளாதார கல்வி நிலையத்தில் அம்பேத்கர் தாக்கல் செய்த இந்திய ரூபாய் தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் 1935-ம் ஆண்டு இந்திய ரிசா்வ் வங்கி உருவாக்கப்பட்டது.

இப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது. நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுக்குப் பயணிப்போது அந்த நாட்டுப் பணம் அல்லது அமெரிக்கா டாலரைப் பயன்படுத்தாமல், இந்திய ரூபாயை பயன்படுத்திக் கொள்ள முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
American DollarArjun Ram MeghwalBJPDelhiIndian CurrencyNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article