For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருத்தணியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது!

09:59 AM Jun 09, 2024 IST | Web Editor
திருத்தணியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது
Advertisement

திருத்தணியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.  

Advertisement

திருவள்ளூரைச் சேர்ந்தவர் அவினாஷ்(19).  சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.   இரவு வேலை முடித்துவிட்டு கம்பெனி பேருந்தில் வந்த இவர் பேருந்தில் தூங்கினார்.  இதனால் திருவள்ளூரில் இறங்க வேண்டிய இவர் திருத்தணியில் இறங்கினார்.  திருத்தணியில் இருந்து பேருந்து மூலமாக திருவள்ளுவருக்கு செல்லலாம் என்று அவினாஷ் நடந்து வந்த நிலையில்,  3 மர்ம நபர்கள் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர்.  கொள்ளையர்கள் இவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

அதேபோல் திருத்தணி அருகில் உள்ள கே.ஜி கண்டிகை டாஸ்மார்க் மதுபான கடைக்கு அருகில் இரவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி என்பவரிடம் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.  அப்போது முரளி தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில்,  செல்போனை கொடுக்குமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.  முரளி செல்போனை கொடுக்க மறுத்ததால்,  கொள்ளையர்கள் அவரை கத்தியால் தாக்கினர்.  இதில் படுகாயம் அடைந்த முரளி கத்தியதும்,  கொள்ளையர்கள் அவரின் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு தப்பினர்.

இதனையடுத்து, இந்த சம்பவங்கள் குறித்து ஆந்திராவை சேர்ந்த முரளி மற்றும் திருவள்ளூரை சேர்ந்த அபினாஷ் ஆகியோர் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.  வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார்,  இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.  இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பல் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க திருத்தணி அருகே கே.ஜி. கண்டிகையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வழிப்பறியில் ஈடுப்பட்ட படவேட்டான் (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   அவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவரின் அண்ணன் இந்த வழிப்பறி கொள்ளையில் முக்கிய மூலையாக செயல்பட்டது தெரியவந்தது.  இதனையடுத்து அரக்கோணம் குமுளி பேட்டையை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் விஷ்ணு (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  மேலும், இவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு, வழிப்பறி வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது.


விஷ்ணு கொடுத்த தகவலின் அடிப்படையில்,  மூன்றாவது வழி பறிகொள்ளையான அரக்கோணத்தைச் சேர்ந்த செல்வம் (18) என்பவரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 9 செல்போன்கள்,  இரண்டு பட்டாகத்தி,  ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  போலீசார் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்,  மது போதையில் மது தேவைக்காக கஞ்சா கடத்தல் மற்றும் வழிப்பறையில் கொள்ளையில் ஈடுபட்டது  தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்களை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
Advertisement