Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழப்பு... அரசே பொறுப்பேற்க வேண்டும்" - இபிஎஸ் கண்டனம்!

கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
09:38 AM Apr 20, 2025 IST | Web Editor
Advertisement

திருச்சி, உறையூரைச் சேர்ந்த லதா (வயது 60) மருதாம்பாள் (85) மற்றும் பிரியங்கா (4) ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்களின் இறப்புக்கு குடிநீரில் சாக்கடை நீர் கலந்தது தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுடினர். . இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 15 நாட்களாக குடிநீரில் பிரச்னை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர். மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?

முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார்.

அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை! இப்படிப்பட்ட முதலமைச்சர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது! உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAIADMKedappadi palaniswamiEPSnews7 tamilNews7 Tamil UpdatesTrichy
Advertisement
Next Article