சென்னை டிஐஜி வீட்டின் அருகே 200 சவரன் நகை கொள்ளை!
சென்னை முகப்பேரில் தொழிலதிபர் வீட்டில் 200 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
03:38 PM Feb 22, 2025 IST
|
Web Editor
Advertisement
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் தொழிலதிபர் சிவக்குமார். நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்பி கார்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில், நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
வீட்டின் தேக்கு மர கதவை பாறாங்கல் வைத்து உடைத்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டிற்க்குள் இருந்த 200 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
டிஐஜி வீட்டின் அருகே நடந்த இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..
Next Article