For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது!

கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். 
01:14 PM Feb 18, 2025 IST | Web Editor
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை   கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
Advertisement

கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் கல்லூரிகளை சேர்ந்த 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளம் மூலம் பழகி, சிறுமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள், அவரை குனியமுத்தூரில் அறைக்கு வரவழைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Advertisement

சிறுமி வீடு திரும்பாததால் அவரது பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், மறுநாள் சிறுமி அவர் வீட்டிற்கு வந்தார். சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கல்லூரி மாணவர்கள் தங்கும் அறையில் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. உக்கடம் காவல் துறையினர் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags :
Advertisement