ஜம்மு காஷ்மீரில் பரவும் மர்ம நோயால் 16 பேர் உயிரிழப்பு - மத்தியக் குழு நேரில் ஆய்வு !
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம் பதால் கிராமத்தில் மர்ம நோய் தாக்குதல் பரவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 45 நாட்களில் 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இது கிராமத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வலி, குமட்டல் மற்றும் சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரில் பரவும் மர்ம நோய் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் மட்டத்திலான குழு ஒன்றை அமைத்து உள்ளார். இந்த நிலையில் மத்திய குழுவினர் இன்று காஷ்மீரில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனினும், தொற்று வியாதிக்கான சாத்தியம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்புகள் நியூரோ டாக்சின்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.