For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Manapparai | மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை - மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு!

01:24 PM Dec 14, 2024 IST | Web Editor
 manapparai   மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை   மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு
Advertisement

ப்பாறையில் மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ராஜீவ்நகர் 1-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ மனைவி பூங்கோதை (72). இவர் கல்வித்துறை எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பூங்கோதை தனது மகன், மருமகள்,பேர குழந்தையுடன் வசித்து வரும் நிலையில் நேற்று அனைவரும் திருச்சிக்கு சென்றதால் மூதாட்டி தனியாக இருந்திருக்கிறார்.

அப்போது பிற்பகல் 2 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த வளையல், செயின், மோதிரம் என 15 சவரன் நகைகளை பறித்ததுடன், மூதாட்டியின் வாய் மற்றும் கைகளை கட்டிவிட்டு செல்போனையும் பறித்து சென்றார்.

தொடர்ந்து, மாலை வீட்டிற்கு வந்த மூதாட்டியின் மகன் மற்றும் மருமகள், மூதாட்டி வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement