ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்
14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.
08:33 AM Nov 27, 2025 IST | Web Editor
Advertisement
14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை 28ம் தேதி துவங்கி டிசம்பர் 10ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடக்கிறது. இந்தியா உள்பட மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
Advertisement
இப்போட்டிகளில் பங்கேற்க தமிழ் நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக நாடு அணிகளுக்கு சென்னை மற்றும் மதுரை விமானநிலையங்களில் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போட்டிகள் நடைபெற உள்ள மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செயற்கை இழை தரையால் அமைக்கப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கட்டுள்ளது. மேலும் மதுரையின் முக்கிய சாலைகளில் ஹாக்கி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சர்வதேச அணிகளின் வருகையை ஒட்டி, கூடுதல் போலீசார் பணியில் உள்ளனர்.