For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை!

12:23 PM Feb 06, 2024 IST | Web Editor
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் விடுதலை
Advertisement

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் விடுவிக்கப்பட்டு விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஜனவரி 13-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களை கைது செய்து இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு
சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய, மாநில அரசுகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் இலங்கை நீதிமன்றம் 12 மீனவர்களை விடுவிக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளில் மேற்கொண்ட பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்ற பின்னர் தமிழக பாஜக மீனவ பிரிவு தலைவர் முனுசாமி தலைமையிலான பாஜகவினர் மீனவர்களை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து உணவு பொட்டலங்கள் வழங்கி வரவேற்றனர். இதனையடுத்து மீனவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அழைத்து செல்வதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் தணி வாகனம் மூலம் அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement