தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், ”எழில் கொஞ்சும், உச்சம் தலையை போல் உள்ளங்களை குளிர்விக்கும் இந்த மண்ணில் வடக்கே உள்ள காசி போல், தெற்கே இந்த தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலிற்கும் நமது அரசு தான் குடமுழக்கு நடத்தியது.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மாணவி பிரேமா மற்றும், இந்த திட்டத்தின் 1 லட்சமாவது வீடானது சுமதி முத்துக்குமார் என்பவருக்கு இன்றை தினம் வழங்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரன் ஆகிய தியாகிகள் வாழ்ந்த இந்த மண்ணில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.
மேலும், தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புக்கள் இன்றைய தினம் வெளியிடப்போகிறேன்.
*மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.15 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும்.
* ரூ.52 மதிப்பீட்டில் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருக்கள் பட்டி பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்கப்படும்.
*2 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்படும்.
* ரூ.6 கோடி செலவில் கடையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கட்டப்படும்.
* சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி பகுதியில் ரூ.12 கோடி செலவில் கண்மாயிக்கள் தூர்வாரப்படும்.
* கடனாநதியானது ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும்.
* கடையநல்லூர் வரட்டாற்றில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும்.
* அடவிநயினார் கோவில் நீர்தேக்கத்தின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாயிக்கள் தூர்வாரப்படும்.
* வி.கே.புதூர், மாறாந்தை உள்ளிட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்வாய்க்கள் சீரமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு கல்லூரியில் 1 கோடி மதிப்பிட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதேபோல், விவசாயிகள் விளைவித்த நெல் பயிர்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய தேவையான நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு ஞாயிற்று கிழமையும் செயல்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.