"மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு" - கே.எஸ்.அழகிரி பேட்டி!
டெல்லியிலில் நடைபெற்ற கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
டெல்லியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி கட்சிகள் உண்டான பகுதி பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இம்முறை காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “விஜயகாந்த் கோபத்தின் ரசிகன் நான்…” – மநீம தலைவர் கமல்ஹாசன் உருக்கம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;
தமிழ்நாடு அரசியலில் மாபெரும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்து வந்தார். தலைவர் மூப்பனார் உடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்தவர் விஜயகாந்த். அவரது உடல்நல குறைவால் தேமுதிக இயக்கம் பாதிக்கப்பட்டது. சிறந்த தமிழ் பற்றுடன் எதையும் தைரியமாக சொல்பவர், தேசிய அரசியலிலும் கால் ஒன்றியவர் விஜயகாந்த் இத்தனை இருந்தும் நம்மிடையே இல்லாதது மனக்கவலையை தருகிறது. விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும். இம்முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தியின் யாத்திரை போன்று இந்தியாவை மையமாக வைத்து தான் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரை நடைபெற்றது.
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.