For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஃபிளாட்பார்ம் கட்டணத்தை திடீரென உயர்த்திய #Zomato! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

02:34 PM Oct 24, 2024 IST | Web Editor
ஃபிளாட்பார்ம் கட்டணத்தை திடீரென உயர்த்திய  zomato  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Advertisement

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) திடீரென ஃபிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

Advertisement

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் அண்மை காலமாக பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்புடன் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து விரும்பிய உணவை விரும்பிய நேரத்தில் ஆர்டர் செய்து உண்ண முடியும் என்பதால் அனைத்துதரப்பு மக்களுக்கும் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உண்பது வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமேட்டோ கடந்த 2008-ம் ஆண்டு தீபிந்தர் கோயலால் தொடங்கப்பட்டது. தீபிந்தர்கோயல் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். இன்று இந்நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் வணிகம் செய்து வருகிறது.

தற்போது பண்டிகை காலம் வர இருக்கும் சூழலில் சோமேட்டோ நிறுவனம் திடீரென ஃபிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பிளாட்பார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாய் என இருந்த நிலையில் அதனை 10 ரூபாய் என உயர்த்தியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்ததை விட கிட்டத்தட்ட 60 % பிளாட்பார்ம் கட்டணத்தை சொமேட்டோ உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக சோமேட்டோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேசனை அனுப்பியுள்ளது.

சோமேட்டோ செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய பாப் அப் மூலம் பிளாட்பார்ம் கட்டண உயர்வு பற்றிய தகவலை அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள நோட்டிபிகேஷனில் பண்டிகை காலத்தில் சிறப்பான சேவைகளை வழங்கவும், செயல்பாட்டு செலவுகளை ஈடு கட்டவும் இந்த கட்டண உயர்வு அவசியம் என சோமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது இந்த கட்டணமானது பண்டிகை காலத்தில் சேவையை இயக்குவதற்கான கட்டணத்தை செலுத்த எங்களுக்கு உதவுகிறது, பண்டிகை காலங்களில் சேவைகளை தொடரவும் பிளாட்பார்ம் கட்டணத்தை சற்றே அதிகரித்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement