Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் ப்ளஸ்' பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
11:21 AM Jul 05, 2025 IST | Web Editor
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் ப்ளஸ்' பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு "இசட் ப்ளஸ்" பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு "ஒய் ப்ளஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.

இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இசட் பிளஸ் பிரிவில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAIADMKCentral governmentedappadi palaniswamiElection TourZ Plus SecurityZ Security
Advertisement
Next Article