ஹைதராபாத்தில் அதிக லைக்குகள் பெற சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய #youtuber - ஆல் பரபரப்பு!
ஹைதராபாத் அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி பலர் தங்களது வீடியோகளை பதிவு செய்து வருகின்றனர். யூடியூபில் வியூவ்ஸ்களை அதிகரிக்கவும், லைக்குகளை அதிகரிக்கவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும், வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். இதன்மூலம் பல யூடியூபர்கள் பணம் சம்பாதித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் யூடியூபர்கள் தொழில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
காடுகளை சுற்றுவது, பல்வேறு இடங்களுக்கு சென்று உணவகங்களை சுவைப்பது, சாப்பாடுகளை சமைத்து வீடியோ போடுவது, அன்றாடம் வீட்டில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக போடுவது, பிடித்த பாடல்களை ரீகிரியேட் செய்து டிக்டாக் வீடியோ போடுவது என பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள் : #KolkataDoctorCase | உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி?
அண்மையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் யூடியூபர் ஒருவர் பணத்தை காற்றில் வீசும் வீடியோ வெளியாகியது.சமூகவலைதளத்தில்"It's_Me_Power" என்று அழைக்கப்படும் பவர் ஹர்ஷா என்ற யூடியூபர், பணத்தை வானத்தை நோக்கி வீசுகிறார்.
இதனால் மக்கள் பணத்தைப் பிடிக்க விரைந்து ஓடினார்கள். இதனால் அங்கு கடும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டது. இப்படி செயல்படுவோருக்கு எதிராக ஹைதராபாத் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.