For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பதின்ம வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் யூ டியூப்!

09:14 PM Dec 14, 2023 IST | Web Editor
பதின்ம வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் யூ டியூப்
Advertisement

பதின் வயதினரின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்று அனைத்துத் தரப்பினரிடமும் பெருமளவில் அதிகரித்துவிட்டது.  அதிலும் பதின் வயதினர், இளைஞர்கள் அதில் மூழ்கிக் கிடக்கின்றனர். சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் இளைஞர்களிடையே மன அழுத்தம் உள்ளிட்ட விளைவுகள் அதிகரித்தாலும் அதன் பயன்பாடு என்னவோ குறைந்தபாடில்லை.

பியூ ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வும் இதைத்தான் கூறுகிறது.  கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 23-ம் தேதி வரை 13 முதல் 17 வயதுடைய 1,453 பதின்ம வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய முடிவுகள் தெரியவந்துள்ளன. அதன்படி, பதின்ம வயதினரில் 6-ல் ஒருவர் யூட்யூப், டிக்டாக் ஆகிய 2 ஊடகங்களையும் தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளது.

பதின் வயதினரில் 71% பேர் தினமும் யூட்யூப் பயன்படுத்துகின்றனர்.  இதில் 16% பேர் தொடர்ச்சியாக அதில் இருக்கின்றனர்.  17% பேர் டிக்டாக்கிலும் 14% பேர் ஸ்னாப்சாட்டிலும் 8% பேர் இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து இருக்கின்றனர்.  பதின்ம வயதினரிடையே யூட்யூப் மிகவும் பிரபலமான சமூக தளமாக உள்ளது.   ஆய்வில் பங்கேற்றவர்களில் 93% யூட்யூப்பை பயன்படுத்துவதாக பதிலளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: “நான் பிரார்த்தனை செய்தால், என்னை யார் தடுக்க முடியும்?” – முகமது ஷமி பேச்சு! 

மேலும் 2022-ல் இதன் எண்ணிக்கை 2% குறைந்திருந்தது.  டிக்டாக், ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 3-ம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  பதின்ம வயதினரின் பேஸ்புக் பயன்பாடு 2014-15-ல் 71% ஆக இருந்த நிலையில், 2023-ல் 33% ஆகக் குறைந்துள்ளது. தற்போது பதின்ம வயதினரில் 19% பேர் மட்டுமே பேஸ்புக்கை தினமும் அல்லது அடிக்கடி உபயோகிப்பதாகத் தெரிவித்தனர்.

வெறும் 3% பேர் தொடர்ந்து பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.  குறிப்பாக இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தவும் தக்கவைக்கவும் சமூக ஊடகங்கள் சிறப்பு நுட்பங்களை கையாள்கின்றன.

நியூயார்க் மற்றும் கலிபோர்னியா உள்பட 33 மாகாணங்கள் இணைந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு சமூக ஊடகங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை காரணமாக உள்ளதாக மெட்டா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது.  ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement