Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு - 2 பேர் கைது!

நெல்லையில் இளைஞர் ஒருவரை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
01:58 PM Apr 08, 2025 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி டவுன் குருநாதன் கோயில் விளக்கு அருகே ஆறுமுகம் ( வயது 20) என்ற அடித்து கொலை செய்து புதைத்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மர்ம நபர்கள் போலீசாருக்கு இந்த தகவலை அளித்துவிட்டு தப்பி ஓடியர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் இளைஞரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 3,600 ஆக உயர்வு!

பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடல் புதைக்கப்பட்ட இடம் கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர், திருநெல்வேலி டவுன் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் போலீசார் இருவரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் தலைமையில் தனி இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நெல்லையில் இளைஞரை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestCrimeNellainews7 tamilNews7 Tamil UpdatesPoliceTirunelveli
Advertisement
Next Article