Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை... 2 பேர் கைது!

புதுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:55 AM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கீழப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (25). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று (ஏப்.4) மழையூர் அரசு தொடக்கப்பள்ளியில் தனது அண்ணன் மகள் ஆண்டு விழாவில் பங்கேற்பதை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவர் கீழப்பட்டி டாஸ்மாக் கடை அருகில் வந்தபோது மர்ம நபர்கள் இவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து மழையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகேசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மலையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பெண்கள் கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணங்களில் போலீசார் விசாரணை
நடத்தி வந்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்த விவாகரத்தில் முருகேசன் தலையிட்டதால் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக முருகேசன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரின் நண்பர் என இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
ArrestCrimehospitalnews7 tamilNews7 Tamil UpdatesPolicePudukkottai
Advertisement
Next Article