For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இயக்குநர் விஜய்யுடன் இளைஞர் தகராறு - போலீசார் விசாரணை!

12:55 PM Dec 26, 2023 IST | Web Editor
இயக்குநர் விஜய்யுடன் இளைஞர் தகராறு   போலீசார் விசாரணை
Advertisement

திரைப்பட இயக்குநர் விஜய்யுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் தகராறு செய்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இயக்குநர் விஜய் படப்பிடிப்பு தளம் பார்ப்பதற்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.   அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,  இயக்குநர் விஜயின் நான்கு சக்கர வாகனத்துடன் உரசி,  மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  டிசம்பர் 26… சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்!

இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இயக்குநர் விஜய் மற்றும் உதவி இயக்குநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  இதனை தொடர்ந்து விஜய்யுடன் இருந்த உதவி இயக்குநர்கள் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.

மேலும்  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இயக்குநர் விஜய்யின் மேலாளர் மணிவர்மா புகார் அளித்தார்.  தேனாம்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement