கழுத்தில் பந்து தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் மரணம்.. ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த சோகம்...
உலகம் முழுவதும் விளையாடக்கூடிய விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். இவ்விளையாட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மற்ற விளையாட்டுகளை போல கிரிக்கெட்டிலும் விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின் போது கழுத்தில் தாக்கப்பட்டு காயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூஸ் இறந்தார். இது கிரிக்கெட் உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேட்ஸ்மேன்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) சில முன்னடுப்புகளை எடுத்தது.
இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். 17 வயதாகும் பென் ஆஸ்டின் ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை வலை பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்டின் கழுத்தில் பந்து தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பென் ஆஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.