விக்ரம் 63 படத்தின் அறிவிப்பு வெளியானது
தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சுமாரி 60 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். மேலும் கதாப்பாத்திரத்திற்காக இவர் மேற்கொள்ளும் மெனகெடல்கள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீர தீர சூரன் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாளுக்கு பின் விக்எஅம் கமர்ஷியல் பார்முலாக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

 
  
  
  
  
  
 