கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் - பினராயி விஜயன் அறிவிப்பு...!
தமிழ் நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரைவில் உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத 35 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் பெண்களுக்கு ‘மகளிர் பாதுகாப்பு திட்டத்தின்' கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.3,800 கோடி நிதி ஒதுக்கப்படும். மாதம் 1,600 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு பென்சனானது மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கிலோவுக்கு 28.20 ரூபாயாக வழங்கப்பட்டு வரும் நெல் கொள்முதல் விலையானது 30 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கான மாதாந்திர கௌரவ ஊதியம் ரூ.1,000 அதிகரிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.