”விசில், கைதட்டு என்றில்லாமல் நீங்களும் இது போன்ற மேடைக்கு வரவேண்டும்” - ரசிகர்களுக்கு தனுஷ் அறிவுரை..!
நடிகர் தனுஷ் நடித்த "இட்லி கடை" திரைப்படம் வரும் அக்டோபர் 1 அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று மதுரையில் இட்லி கடை படத்தின் பிரமோஷன் நிகழச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் தனுஷ், அருண்விஜய், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இவ்விவிழாவில் பேசிய தனுஷ்,
”விசில் அடித்திட்டும் கைதட்டி கொண்டு மட்டும் இல்லாமல் இங்கு இது போன்ற மேடைக்கு எழுந்து வாருங்கள் வரணும் உழைச்சி இங்கு வரணும் எல்லாராலயும் முடியும் கண்டிப்பாக நீங்கள் இதை செய்யணும் செய்வீர்களா” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனது அப்பா சென்னைக்கு வர பஸ்ஸுக்கு காசு இல்லை. மதுரையில் இருக்கிற சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு போவதற்கு நினைத்தபோது மதுரைக்கு வரவும் பஸ்ஸுக்கு பணம் இல்ல. பணம் வாங்கிட்டு மெட்ராசுக்கு வர வேண்டும் என்பதற்காக செல்வராகவன் 4 வயது இருக்கும்போது எங்க அம்மா 3 மாசம் கர்ப்பமாக இருந்த போது, அவங்க ஊரில் இருந்து மதுரைக்கு நடந்தே கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் நடந்தே வந்து ஒரு சொந்தக்காரங்களை பார்க்க வந்தாங்க.
அப்படி எங்க அப்பாவும், எங்க அம்மா கர்ப்பமாக இருந்தபடி கால் கடுக்க நடந்து வந்து மேடை தான் இந்த மேடை. இந்த மேடையில் அவர்களை கொண்டு வர எவ்வளவு முயற்சி செய்தேன். அவர்கள் இருந்திருந்தால் இன்னும் இந்த மேடை முழுமையாகவும் நிறைவாகவும் இருந்திருக்கும். ஏதோ ஒரு சில காரணங்களால் அவர்களை அழைத்து வர முடியவில்லை.
மதுரையில் ஆடுகள பட சூட்டிங் போது 300 நாட்கள் இருந்தேன். ஆடுகளம் படத்திற்கு மதுரையில் நான் ஓடாத ஆடாத தெரு கிடையாது, திருப்பரங்குன்றத்தில் 30 நாள் இருந்தேன்; மதுரையில் இருந்த நாட்களில் நான் அமைதியாக நிம்மதியாக இருந்தேன். நான் இந்த மண்ணை சேர்ந்தவன் தான் இந்த ஊர் ஆள் மாதிரி தான் நான் இருப்பேன்” என்றார்.