“எதுக்கு வந்தோன்றதையே மறந்துட்டு நிஜ சமையல்காரனாவே மாறிட்டானே” - திருட சென்ற இடத்தில் ஆம்லெட், ஃபீப் ஃபிரை என வகை வகையாக சமைத்து சமைத்து சாப்பிட்ட நபர்!
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஹோட்டலில் திருட வந்த திருடன் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, பீப் பிரை செய்ய முயலும் போது சிசிடிவி இருப்பதை பார்த்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
10:28 AM May 23, 2025 IST | Web Editor
Advertisement
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சந்திர நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய திருடர் ஒருவர், அருகில் இருந்த ஹோட்டலின் பின்புர கதவை உடைத்து ஹோட்டலிலும் திருட முயன்றுள்ளார்.
Advertisement
அப்போது பசிக்கவே அங்கிருந்த முட்டையை எடுத்து வெங்காயத்தை நறுக்கி ஆம்லெட் போட்டு சாப்பிட்டார். தொடர்ந்து ஃபிரிட்ஜில் இருந்த பீப்-ஐ எடுத்து ஃபீப் ஃபிரை செய்ய முயலும் போது, எதிரே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அங்கிருந்து திருடன் ஓட்டம் பிடித்த நிலையில், உரிமையாளர் கொடுத்த புகார் அடிப்படையில் கசபா காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.