நீங்கள் தான் ரோல் மாடல்... ராகுல் டிராவிட்டை புகழ்ந்த ஆனந்த் மஹிந்திரா!
ராகுல் டிராவிட்டுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் பரிசுத் தொகையை வேண்டாம் என்று மறுத்து விட்ட நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவரை புகழ்ந்துள்ளார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவுக்கு வந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை வென்ற நிலையில் அதற்கு காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடி பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்தது. இதேபோன்று இந்திய அணியினருக்கு மொத்தம் 125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.5 கோடி பரிசாக கொடுக்கப்படும். அதன் பிறகு உதவி பயிற்சியாளர்களுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் ராகுல் டிராவிட் தனக்கு மற்றவர்களை போன்ற பரிசுத்தொகையை கொடுத்தால் போதும் என்றும் அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்றும் கூறி ரூ.2.5 கோடியை மட்டும் பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய மற்ற உதவியாளர்களுக்கு கிடைத்த அதே பரிசுத்தொகையே தனக்கும் போதும் என்று ராகுல் டிராவிட் பெருந்தன்மையாக கூறியதை தற்போது ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
The mark of a man…
Now THAT’s what you call a role model.
👏🏽👏🏽👏🏽 https://t.co/JWquKCUbf6
— anand mahindra (@anandmahindra) July 10, 2024
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இதுதான் ஒரு மனிதனின் பெருந்தன்மை. இதைத்தான் எல்லோரும் ரோல் மாடல் என்று அழைக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.