Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
12:26 PM Nov 19, 2025 IST | Web Editor
திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ஒன்றும் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

Advertisement

இது போதாததற்கு, சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொலை முயற்சி நடந்தது, போதையில் இருவர் காவலரையே தாக்கியது ஆகியவை அறிவாலயம் ஆட்சியில் தலைநகரிலேயே ஏட்டளவுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது.

ஒரு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் போலியாக பெருமை பேசப்பட்ட "இரும்புக்கரம்" நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி!

துருப்பிடித்த இரும்பைக் காயலான் கடைக்குத் தூக்கிப் போடுவது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்களும் கண்காணா தொலைவில் தூக்கி எறியத் தான் போகிறார்கள்! சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யப் போகிறார்கள்! இது உறுதி"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
corrupt ruleCriticismDMKMKStalinnainar nagendranTamilNaduwitness
Advertisement
Next Article