Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏற்காடு பேருந்து விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்!

12:59 PM May 04, 2024 IST | Web Editor
Advertisement

“ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

ஏற்காடு மலைப்பாதையில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்து 20 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்தில் காயமடைந்தோர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்,  காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் தர வேண்டும்.  சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.  ஏற்காடு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKbus accidentEPSReliefSalemTN Govt
Advertisement
Next Article