2023-ம் ஆண்டும்... அறிவியல் தொழில்நுட்பமும்... சிறப்பு தொகுப்பு...!
2023-ம் ஆண்டில் தொடர்ச்சியாக பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் நிகழ்ந்துள்ளன. ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI போன்றவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்...
Multicloud
2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பல புதுமைகளைக் கண்டுள்ளது. குறிப்பாக மல்டிகிளவுட் என்ற முறை பல சவால்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம். Cloud தொழில்நுட்பம் என்பது எவ்விதமான ஹார்டுவேர் சாதனமும் இன்றி இணையத்தில் தரவுகளை சேமிக்கும் முறையாகும். இதன் அடுத்த கட்டம்தான் மல்டி கிளவுட். அதாவது ஒரு தளம் வழியாக எல்லா கிளவுட் நிறுவனங்களையும் நம்மால் பயன்படுத்த முடியும். இது பயனர்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
GPT-4 ChatGPT
மொழி மாதிரியான GPT-3.5 மாடலுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப வெளியீடுகளின் ஒன்று GPT-4 ஆகும். மனித அளவிலான செயல்திறனை GPT-4 செய்ததாக OpenAI கூறியுள்ளது.மேலும், இதனை நாம் சந்தா மூலமாக மட்டுமே இயக்க முடியும்.
Advanced Robotics
தொழில்துறையில் ஆட்டோமேஷன் முதல் தனிப்பட்ட ரோபோக்கள் வரை ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பன்மடங்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் இரண்டு கால் ரோபோவான Digit-ஐ சோதனை செய்யத் தொடங்கியது. இந்த சாதனம் அமேசான் நிறுவனத்தில் காலி டப்பாக்களை இடமாற்றுவதற்கு பயன்படும் என அறிவித்திருந்த நிலையில், பல நிறுவனங்களும் வேலை ஆட்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மூலமாக இந்த ஆண்டு ரோபோடிக்ஸ் துறை பன்மடங்கு உயர்ந்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.