For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#WT20WC | பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணி!

08:47 AM Oct 06, 2024 IST | Web Editor
 wt20wc   பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணி
Advertisement

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி முந்தைய ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் உள்ளது. பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவுக்கு இத்தோல்வி கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற பாகிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது.

இந்த தொடரில், இந்திய அணியின் ரன்ரேட் கடும் கவலை தருவதாக உள்ளது. (-2.99). பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள ஆட்டங்களில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். நியூஸி.க்குக்கு எதிரான ஆட்டத்தில் பௌலிங், பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் ஹா்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி சொதப்பியது. பலம் வாய்ந்த இலங்கையை வீழ்த்திய உற்சாகத்தில் பாகிஸ்தான் அணி காணப்படுகிறது. இந்தியா எந்த வீராங்கனைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் குழப்பத்தில் உள்ளது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத், ஜெமீமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். பௌலிங்கில் சிறந்த பார்மில் உள்ள பூஜா வஸ்தார்க்கருக்கு ஒரே ஒரு ஓவா் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஸ்பின்னர் ராதா யாதவுக்கு வாய்ப்பு தர வேண்டும். பேட்டிங்கை வலுப்படுத்த தயாளன் ஹேமலதாவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். பாகிஸ்தான் அணி நிதா தர், கேப்டன் பாத்திமா சனா, சாடியா இக்பால் ஆகியோருடன் பலுவான பௌலிங்கை கொண்டுள்ளது. முன்னணி பௌலா் டயானா பெய்க் காயம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு கவலை தருவதாகும்.

இரு அணிகளும் நேரு நர் மோதிய 15 ஆட்டங்களில் இந்தியா 12-இல் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானை வென்றால் தான் நாக் அவுட் சுற்றை நினைத்து பார்க்க முடியும் என்பதால், வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா ஆடவுள்ளது.

Tags :
Advertisement