Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சமூக வலைதளத்தில் முதலமைச்சர் குறித்து தவறான பதிவு - பாஜக நிர்வாகி கைது!

02:50 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை
வெளியிட்டு தவறான கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். 

Advertisement

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
முருகேசன் (44).   இவர் கரூரில் பாஜகவின் மாவட்ட துணை தலைவர் பொறுப்பில் உள்ளார்.   இவர் தனது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து முதலமைச்சர் இறந்ததுபோல் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

மேலும்,  திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக்
என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த தீபக் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

மேலும்,  முதலமைச்சர் குறித்து தவறான புகைப்படத்தை பதிவிட்ட முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீபக் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக
பாஜக நிர்வாகி முருகேசனை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
ArrestBJPCMoDMKkarurMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesSocial Media
Advertisement
Next Article