WPL 2025 | பெங்களூரை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி!
5 அணிகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டிற்கான (wpl) மகளிர் பிரீமியர் லீக் (பிப்.14) தொடங்கி நடைப்பெற்று வருகில். இதில் நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 81 ரன்கள் குவித்தார். பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வீராங்களைகள் ரன்களை வாரி குவித்தனர்.
கடைசியில் இரண்டு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி பவுண்டரி அடித்து அசத்தினார். இதன்மூலம் 170 ரன்கள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணிவெற்றி பெற்றது. தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.