"தேர்தல் பிரச்சாரத்திற்கு உதயநிதி அழைத்தால் செல்வீர்களா?" - நடிகர் சந்தானம் பதில்!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் சந்தானம். கடந்த 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2019ல் தில்லுக்கு திட்டு படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நடித்த தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் படங்கள் ரசிக்கும் படி அமைந்தது. குறிப்பாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் சிறந்த கமெடி படமாக பேசப்பட்டது.
இதையும் படியுங்கள் : தூக்கில் தொங்கிய பேரன்.. முட்புதரில் கிடந்த பாட்டி – சென்னையில் அதிர்ச்சி!
தற்போது இதன் மூன்றாம் பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகி உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆப்ரோ இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் மே மாதம் 16ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையே, சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபிள் நடைபெற்றது. அப்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு உதயநிதி அழைத்தால் செல்வீர்களா?" என்று சந்தானத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், "உதயநிதி அழைத்தால் எனக்கு சில விஷயங்கள் செட்டானால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன்" என்றார்.