"டாஸ்மாக் மூலம் குங்குமத்தை அழிக்கும் வேலை நடக்கிறது" - தமிழிசை சௌந்தரராஜன்!
கோவை மாவட்டம் கணபதி பகுதியில் நடைபெற்ற மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளர், அரவிந்த் மேனன், தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராஜ், அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், i.j.k கட்சியின் லீமா ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "நான் கோவையின் மருமகள் என்ற உரிமையோடு நிற்கிறேன். தமிழகத்தை தலை நிமிர வைப்போம். திமுக தலை குணிய விடமாட்டோம் என்கிறது. ஸ்டாலின் ஆயிரம் ரூபாய் போடுகிறோம் என்கிறார்.
யார் வங்கி கணக்கு ஆரம்பித்து கொடுத்ததால் உங்களால் ஆயிரம் ரூபாய் போட முடிகிறது. தமிழ் தேசத்தை தலை நிமிர வைத்தவர் மோடி. குங்குமத்துக்கு, ஏதேனும் ஆபத்து என்றால் மோடி பொறுத்துக்கொள்ள மாட்டார். குங்குமம் பெயரில் ஆபரேஷன் சிந்தூர் என பெயரை வைத்தார்.
ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் குங்குமத்தை அழிக்கும் வேலை செய்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், 1000 ரூபாய் கொடுக்கிறார்கள் மீண்டும் டாஸ்மாக் போகிறது. அந்த ஆயிரம் ரூபாய் வேண்டுமோ அல்லது உங்களை தொழில் முனைவோராக்கும் பாஜக வேண்டுமா என்பதை உணர்ந்து பாருங்கள்.
இந்தியா கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விஜய் மீனவர்களை காப்பாற்ற தெரியாதா என கேட்கிறார். பிரதமதர் வந்த பிறகு 3700 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்தமுறை உங்களுக்கு எழுதி கொடுப்பவரகள் முழுமையாக தெரிந்து எழுதி கொடுக்க வேண்டும். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ கைகள் உயர்கிறதோ இல்லையோ தாமரை மலர்ந்தே தீரும்" என்று தெரிவித்துள்ளார்.