For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகளிர் உலகக் கோப்பை | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 330 ரன்கள் குவித்த இந்தியா..!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி 330 ரன்கள் குவித்துள்ளது.
07:38 PM Oct 12, 2025 IST | Web Editor
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியில் இந்திய அணி 330 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை   ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  330 ரன்கள் குவித்த இந்தியா
Advertisement

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில்  இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.

Advertisement

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்தியாவின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிரங்கிய பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர்  அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்கள் குவித்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 330 ஆக உயர்ந்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

Tags :
Advertisement