#WomenTennisChampionship | செக் குடியரசு வீராங்கனையை வீழ்த்தினார் ஸ்வியாடெக்!
டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனையை வீழ்த்தி இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : “தேர்தலில் யாருடனும் கூட்டணி வேண்டாம்” – தவெக தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்!
இந்நிலையில், டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசு வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இதையடுத்து, நாளை மறுதினம் நடைபெற போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காப் மற்றும் ஜெசிகா பெகுலாவுடன் மோத உள்ளார்.