மகளிர் டி20 ஆசியக் கோப்பை - ஜூலை 19ல் இந்தியா, பாகிஸ்தான் மோதல்!
இலங்கையில் வரும் ஜூலை 19ஆம் தேதியன்று ஆசியக் கோப்பை மகளிர் டி20 போட்டிகள் தொடங்குகின்றன.
இலங்கையில் அடுத்த மாதம் மகளிர் டி20 ஆசியக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை தம்புலாவில் நடைபெற உள்ளது. ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்தியா பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 தொடரில் ஏழு பட்டங்களை வென்ற ஒரே அணியாக இந்திய அணி உள்ளது.