லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்!
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்தாண்டு நவம்பரில் நடந்தது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார்.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தாண்டிற்கான ஐபிஎஸ் போட்டி வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கபட்ட ஸ்ரேயஸ் ஐயர் சமீபத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள லக்னோ ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் கோயங்கா,
கண்டிப்பாக ரிஷப் பண்ட் தலைமையில் அணி வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன். ரிஷப் பண்ட் சிறந்த ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக வருவார் என நினைக்கிறேன். இன்னும் 10-12 ஆண்டுகளில் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் அவரது பெயர் தொடர்புபடுத்தி பேசப்படுவதை நீங்கள் கேட்பீர்கள்” என கூறியுள்ளார்.