பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!
10:41 AM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement
பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக மாதத்தின் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட்டு வந்தநிலையில், இம்மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்பே ரூ.1000 வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஜனவரி 10ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவரின் கணக்குகளிலும் ரூ.1,000 வரவு வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளது. கடந்தாண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.