மகளிர் ப்ரீமியர் லீக் இறுதிப்போட்டி : மும்பை - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!
மும்பை, உத்தரப் பிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்ற மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இதில் புள்ளிப்பட்டியல் முதல் இரண்டு இடத்தை பிடித்த டெல்லி- மும்பை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த இரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டெல்லியை வீழ்த்தி மும்பை இரண்டாவது முறையாக வெற்றிப் பெறுமா அல்லது மும்பை அணியை வீழ்த்தி டெல்லி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), சஜீவன் சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி. கமாலினி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனாசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், மரிசான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது