Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் - மே.இ.தீவுகளுக்கு 315 ரன்களை இலக்கு வைத்த இந்தியா!

06:16 PM Dec 22, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று வதோதராவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 34 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸைடா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும், டீண்ட்ரா டாட்டின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

Tags :
IndiaINDWvsWIWodiSmriti Mandhanawest indies
Advertisement
Next Article