"பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை!" - ஜவான் பட நடிகை ஆவேசம்!
பாலிவுட் நடிகை ரிதி தோக்ரா "பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரமில்லை" என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் மருத்துவரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூழலில் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஆக.14) விசாரணையைத் தொடங்கினர்.
இந்த நிலையில், ஜவான் படத்தின் நடித்துள்ள பாலிவுட் நடிகை ரிதி தோக்ரா "பாலியல் வன்கொடுமை தேசிய பிரச்னை ஆகாதவரை பெண்களுக்கு சுதந்திரமில்லை" என தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.