அரிசி சாப்பிட்டு #Guinness உலக சாதனை படைத்த பெண்...இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் என்பவர் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
உலகில் சில சிறப்புத் திறமைகள் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் இந்த சிறப்பான திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. மேலும் அவர்களின் இந்த தனித்துவமான திறமைக்காக, அவர்கள் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு நபரின் திறமை வெளி வந்துள்ளது. ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அரிசி சாப்பிடுவது பொதுவான விஷயம் தானே. இதில் என்ன சாதனை இருக்கிறது என்று கேட்டால், சாப்ஸ்டிக்ஸ் பயன்படுத்தி அரிசி சாப்பிட்டதே அவரை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிட கைக்குப் பதிலாக பயன்படுத்துவது தான் சாப்ஸ்டிக்ஸ். இதனை பயன்படுத்துவது எளிதாகத் தோன்றலாம், ஆனால் இதனை சரியாக பயன்படுத்த நிறைய பயிற்சியும் பொறுமையும் தேவை. சாப்ஸ்டிக்ஸை கொண்டு உணவு சாப்பிடுவதற்கே அதிக பயிற்சி தேவையென்றால் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி அரிசியை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம்” – வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் #MKStalin பேச்சு!
தானியங்களை சாப்ஸ்டிக்ஸ் கொண்டு சாப்பிடுவது கடினமான காரியம். வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை எடுத்து சாப்பிடும் சவாலான பணியை மேற்கொண்டார். அவர் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார். அவரது இந்த சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.