For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

LinkedIn-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்- கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்! - எப்படி?

07:53 AM Feb 13, 2024 IST | Web Editor
linkedin ல் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண்  கூகுளில் இருமடங்கு சம்பளம் வாங்கும் அதிசயம்    எப்படி
Advertisement

LinkedIn நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த மரியானா கோபயாஷி, தற்போது கூகுள் நிறுவனத்தில் இரு மடங்கு சம்பளத்துடன் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

லிங்க்ட்இன் நிறுவனத்தில் கணக்கு நிர்வாகியாக பணிபுரிந்தவர் மரியானா கோபயாஷி. இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் லிங்க்ட்இனில் இருந்து  மரியானா கோபயாஷி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன்பின் தனது கனவு வேலையான லிங்க்ட்இன் நிறுவனத்தில் பணிபுரிந்ததை பற்றியும், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வம் இருப்பதை குறித்தும் ஒரு விடியோ பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து, அந்த விடியோ பதிவு முலம் கூகுள் டப்ளினில் பணியமர்த்துபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மரியானா கோபயாஷி முயற்சித்தார்.

இதையும் படியுங்கள் ; தோல்வியில் முடிந்த மத்திய அரசின் பேச்சுவார்த்தை - திட்டமிட்டபடி டெல்லி புறப்பட விவசாயிகள் முடிவு!

இது குறித்து அந்த பெண் கூறியதாவது;

"லிங்க்ட்இன் நிறுவனத்தில் பணிபுரிவது தனது கனவு. ஆரம்பத்தில் பணிநீக்கத்தை பற்றிய செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், திசைதிருப்புவதாகவும் இருப்பதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. அதன்பின், தனது பயணத்தை பற்றி விடியோ பதிவை உருவாக்கி லிங்க்ட்இனில் பதிவு செய்தேன்.

தான் அந்த விடியோ மூலம் கூகுளில் நேர்காணலுக்கு வந்தேன். தனது முயற்சிகள் பலனளித்துள்ளது. இப்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். முன்னதாக பெற்றதை விட இரு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறேன்"

Tags :
Advertisement